திங்கள், 27 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 3

தன் தமைக்கையின் கணவர் வந்தியதேவனை அழைத்து கொண்டு இளவரசர் அருள்மொழி தன்
தந்தை சுந்தர சோழர் கட்டிய சிறிய அரண்மனை இருக்கும் சிதம்பர கிழக்கு
பகுதியை நோக்கி நடக்க அரம்பித்தார், வெகு நாள்களுக்கு பிறகு இளவரசரை கண்ட
மகிழ்ச்சியில் சிதம்பர மக்கள் ஆரவார கோஷங்களை முழங்கி அருள்மொழியை
பின்தொடர்ந்து நடக்க அரம்பித்தனர், அவர்களுடன் நம்பிராஜன் நம்பியூம்,
பஞ்சவன்மகாதேவியும் சென்றனர், சேர அந்தனர்களை தவிர்த்து அனைவரும் செல்ல,
நடராஜன் ஆலயத்தின் வாயில் முன் இருந்த சகாதேவனை சுற்றி சேர அந்தனர்
சூழ்ந்துகொண்டனர்.

வயதான சேர அந்தனர் சகாதேவன் முன் வந்து சமஸ்கிருதத்தில் பேச
அரம்பித்தார், அந்தனர்களை தவிர வேறு யாருக்கு தெரிய கூடாது என்பதற்காக
சமஸ்கிருதத்தில் பேசுவது அந்தனர்களில் வாடிக்கையான செயல்களில்
ஒன்று,"சகாதேவா! எதற்காக இளவரசரை கண்டு நடுங்கிறாய்? இந்த சோழ தேசத்தை
தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் நம் தலைவர் ரவிதாசன் இருக்கும்
பொழுது, அருள்மொழியிடம் அமைதி காத்துபோவது சரியல்ல"

"பெரியவரே பொறுங்கள், நாம் அந்தனர்கள்!, எதையும் ஞானத்துடன்
செயல்படுவர்கள்! நாம், நம் தலைவர் ரவிதாசன் இந்த சோழ தேசத்து பிரம்மராயராக
(முதலமைச்சர்) இருக்கலாம், ஆனால் வந்து இருப்பது அருள்மொழிவர்மர், இளவரசர்
பட்டம் சூட்டப்பட்டவர், உத்தம சோழரிடம் அன்பை பெற்றவர், கடற்கொள்ளையர்களை அழித்து வங்கடலில் வணிகத்தை மேம்படுத்தியவர், சோழ தேசத்து மக்களின் அன்பை சம்பாதித்தவர், அவரிடம் கவனமாகவேசெயல்படவேண்டும், என்பதை சிந்தித்து பாருங்கள், நீங்களே  அறிவிர்கள்?"

சகாதேவனின் இளைய மகன் இந்திரன் தன் தந்தையிடம், "தந்தையே! புலியையே கொன்ற
இனம், நம் இனம். அருள்மொழி நம்மை எதிர்த்தால், அவன் தமையனை எமலோகம்
அனுப்பியது போல அவனையும் அனுப்பிவிடுவோம்." என்று கூறிமுடிப்பதற்குள்,
இந்திரன் கண்ணத்தில் பிளார் என்று அறைந்தான் சகாதேவன்  "முடனே! நாவை
அடக்கு, நீ பேசிய விடயம் சோழர்களில் செவியில் விழுந்தாள், நம் உயிரை
எடுத்துவிடுவார்கள்."

கண்ணத்தை தடவிகொண்டு, "நான் சமஸ்கிருதத்தில் தானே பேசினேன், நான்
பேசியது, நம்மை தவிர யாருக்கு தெரியபோகிறது."

"நாம் இருப்பது சோழ தேசம், கல்களுக்கு கூட செவி உண்டு, நாம் பேசும் உடல்
அசைவிலே உணர்ந்து விடக்கூடியவர்கள், அவர்களுக்கு மட்டும் அந்த ரகசியம்
தெரிந்தால், நம் உடலில் உயிர் இருக்காது" என்று தன் அதங்கத்தை சகாதேவன்
வெளிப்படுத்த, இவர்கள் பேசி கொண்டு இருப்பதை தூரத்தில் இருக்கும் பெரிய
அலமரத்தின் கிளைகள் அடர்த்தியில் மறைந்து இருக்கும் ஒரு இளைஞன்
கண்காணித்து கொண்டு இருந்தான்.

இளவரசர் வந்து இருப்பதை அறிந்து அரண்மனையில் உள்ள பணியாளர்கள் தடபுடலான
விருந்தை ஏற்பாடு செய்ய, பயண களைப்பில் இருந்த இளவரசர் அருள்மொழியும்,
வந்திய தேவரும் அவர்களுடன் வந்த வீரர்களுக்கும், அடிகளார் நம்பிராஜனும்
அமர்ந்து அறுசுவை உணவுகளை உண்டு தங்கள் பசியை தீர்த்து கொண்டனர், ஆனால்
வந்திய தேவர் காலையில் நடந்த சம்பவத்தால் வருத்ததுடன் இருப்பதை அறிந்து
அருள்மொழி பேச அரம்பித்தார்,"என்ன அன்பரே, உங்களுக்கு இன்னும் என் மீது உள்ள கோபம் தீர வில்லை போலும்?"

"உங்கள் மீது நான் எப்படி கோப பட முடியும்?" என்று சொல்லி வந்திய தேவர்
தன் முகத்தை திருப்பி கொள்ள,

"அன்பரே, நான் செய்கின்ற ஒவ்வொறு காரியத்திலும், ஓர் அர்த்தம் இருக்கும்,
நீங்கள் பழைய வந்திய தேவராக இருந்து இருந்தால், உணர்ந்து இருப்பீர்கள்,
என்று என் தமைக்கை கரம் பிடித்தீர்களோ? அன்றே உங்கள் இதயத்தை மட்டும்
அல்லாமல், ஞானத்தையும் இழந்துவிட்டீர்கள்."

"என் குந்தவை மீது குறை சொல்லாமல், உங்களால் இருக்க முடியாத அருள்மொழி?,
அவள் என் மனைவி மட்டும் அல்ல, எனது உடலை இயக்கும் உயீர்"

"ஆகா, அற்புதம், அனந்தம், என் மனம் குளிர்ந்து விட்டது"

"எதற்காக அனந்தப் படுகிறீர்கள் இளவரசே, உங்கள் தமைக்கை குந்தவை மீது
நீங்கள் வைத்து இருக்கும் பாசத்தை விட குறைவு தான் என் மனைவி மீது நான்
வைத்து இருக்கும் அன்பு, இதை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன்."

"அன்பரே, நான் அதற்காக அனந்தப்படவில்லை, தங்கள் இருவரும் இந்த சோழ
தேசத்தின் வளர்ச்சி மீது தான் காதல் கொண்டவர்கள், ஒரே கொள்கை உடையவராக
இருந்த காரணத்தாலே இனைந்தீர்கள், நான் மகிழ்ச்சி அடைய காரணம், தாங்கள்
என் பெயர் சொல்லி அழைத்தாலே அனந்தப்பட்டேன், தாங்கள் என் பெயர் சொல்லி
அழைத்து வெகு காலம் ஆகிவிட்டது.நான் இந்த வையகத்தில் அதிகம் நேசிப்பது, என் இனிய நண்பரான தங்களையும், என் உயிரினும் மேலான என் தமைக்கையான குந்தவையை தான், நான் இந்த வையகத்திற்கே அரசனாக ஆனாலும், தங்களுக்கு என்றுமே அருள்மொழி தான்." என்று கூறி வந்திய தேவரை கட்டி தழுவ இருவரது கண்களில் கண்ணீர் வடிய, இவர்களது அன்பையும், நட்பையும் கண்டு சிதம்பர மக்கள் மெய்மறந்து பார்த்தனர்.

"தங்கள் நட்பால் வானவர் குலமே பெருமை அடைந்துள்ளது, என் இனிய நண்பரே
எதற்காக சேர அந்தனர்களை தண்டிக்காமல் வீட்டீர்கள், சிவலோகம் பதவி அடைந்த
நான்கு அடிகளாரை எப்படி அழைத்து வரமுடியும்?"

"அன்பரே! காரியத்திலே கண்ணாக இருக்கீறீர்களே? சேர அந்தனர்களிடம் மிகவும்
கவணமாகவே இருக்க வேண்டும் என்பதை தாங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம்
இல்லை, பிரம்மராயராக(முதன்மை அமைச்சராக) இருக்கும் ரவிதாசனை பற்றி என்னை
விட உங்களுக்கே நன்கு தெரியும்,

முயன்றால் முடியாது என்கிற வார்த்தைகளே கிடையாது. சைவ மதத்தின் புகழை
பரப்பிய அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், திருவாசகருக்கு மரணமே என்றுமே
கிடையாது." என்று கூறி வந்திய தேவரின் காதில் அருள்மொழி ரகசியமாக சில
வார்த்தைகள் கூற வந்திய தேவரின் முகம் அனந்ததில் முகம் மலர்ந்தது.

திங்கள், 20 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 2

அதிகாலை நேரத்தில் சிதம்பரத்தின்  மேற்கே  இருக்கும் காஞ்சி செல்லும்
பாதையில் ஒரு சிறிய படை புயலை போன்று வேகமாக சிதம்பரம் நோக்கி
வந்துகொண்டு இருந்தது, அந்த படையின் நடுநாயகமாக ஒரு சாம்பலும் வென்மையும்
கலந்த உயர்ரக அரபு நாட்டு குதிரையில் வரும் வீரன் தான், இந்த காவியத்தின்
நாயகன், ஆம் பிற்காலத்தில் தென் இந்தியாவை ஆண்ட ஸ்ரீ ராஜராஜ சோழன் என
வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்ட போகும் அருள்மொழிவர்மர் தான்
அக்குதிரை செலுத்தி கொண்டு இருந்தார்.

சுந்திர சோழரின் மகனான அருள்மொழிவர்மருக்கு, தன் தந்தைக்கு பிறகு கிடைக்க
இருந்த சோழ தேசத்து அரியணையை தன் சிறிய தந்தை உத்தம சோழருக்கு வீட்டு
கொடுத்து 14 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, மாமன்னர் உத்தமர் சோழரின்
கட்டளைக்கு கீழ் பணிந்து சோழ தேசத்தின் எல்லைகளை காக்கும் பொறுப்பை
கவணித்து கொண்டு, தனக்கு உள்ள இளவரசர் என்கிற பதவியின் அதிகாரத்தை
பயண்படுத்தி சோழ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து மக்கள் மத்தியில்
மன்னராக திகழ்ந்தார் அருள்மொழி வர்மர்,
சோழ தேசத்தின் அரசனாக இல்லாவிட்டாலும், தனக்கு என்று ஒரு சிறிய
ராஜங்கத்தையே உருவாக்கி வைத்து இருந்தார் அருள்மொழி. அதில் ஒற்றர் படை
மூலம் சோழ தேசத்தை கண்காணித்து, போர் பாசறை மூலம் இளைஞர்களுக்கு போர்
பயிற்சி அளித்து கொண்டும்,  மக்களின் தேவையை கவணிக்க ஒரு துறையை
உருவாக்கி கொண்ட சோழ தேச மக்களிடம் தனி செல்வாக்கு பெற்றவராகவே
விளங்கிவிட்டார், காரணம் உத்தமர் சோழரின் அன்பிற்கு பாத்திரமானவர்
என்பதால் அருள்மொழியால் இது முடிந்தது.

காஞ்சியின் எல்லை பகுதியை பலப்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டு,
சிதம்பரம் வழியாக தச்சை செல்வதற்காக பயணிக்க அரம்பித்தார்.

அருள்மொழி வர்மருடன் சரிசமமாக கூட வரும் மாவீரரை பற்றி அறிமுகம்
உங்களுக்கு தேவை இல்லை(நீங்கள் பொன்னியன் செல்வன் நாவல் படித்து
இருந்தால்.) அருள்மொழிவர்மரின் அக்கா குந்தவைப்பிராட்டியின் கணவர்,
வல்லவராயன் வந்திய தேவன் தான் அது. சுந்திர சோழர் மறைவிற்கு பிறகு
ஏற்பட்ட குழப்பமான காலகட்டத்தில் தனது சாகசத்தால் தீர்வை ஏற்படுத்தி சோழ
தேசம் தற்பொழுது நிம்மதியூடன் வாழ காரணமானவர் தான் இந்த வந்திய தேவன்,
இவர்கள் இருவருடன் சிறிய மெய்காப்பாளர்கள் படையும் பின்தொடர்ந்து வந்தது.
சித்ம்பர எல்லையை நெருங்கிய உடன். அருள்மொழிவர்மர் வந்தியதேவருடன் பேச
அரம்பித்தார்.
"அன்பரே சிதம்பரத்தை நெருங்கிவிட்டோம், நடராஜனை தரிசித்து விட்டு நம்
பணியை கவணிக்கலாமா?"
"அப்படியே செய்யலாம் இளவரசே, கரும்பு சாப்பிடால் கச்காவா செய்யும்."

சிறிய புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, "அன்பரே என் சோகமாக இருக்கீங்க, என்
தமைக்கையை  வெகு நாள்களாக பிரிந்து வந்தாலா?"

"அப்படி எல்லாம் இல்லை இளவரசே!, குந்தவையை வீட்டு அணு அளவும் பிரிந்தது
இல்லை, அவள் என் இருதயத்தில் குடிஇருக்கும் பொழுது எப்படி பிரிவேன், என்
கவலை எல்லாம் சோழ தேசத்தை பற்றியும், உங்களை பற்றியும் தான் என் கவலை."

"இளவரசே மறந்துவீட்டீர்களா! தங்கள் தமைக்கையின் ஆசையை, தங்களை சோழ
தேசத்தின் அரியணை ஏற்றி வையகம் முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்பதே
அவளது ஆசை, அவளது கணவனான நான், என்று என் மனைவியின் ஆசை நிறைவேற்றுவேன்
என்கிற கவலை, வருங்கால சோழ தேசத்து அரசரை பெயர் சொல்லி அழைப்பது
முறையல்லவே, அதனால் தான் தங்கள் பெயர் சொல்லி அழைக்கவில்லை"

"நான் இவ்வையகத்தையே ஆண்டாலும், நீங்கள் என்றும் என் அன்பிற்கு
பாத்திரமானவர், தாங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறேன்,
நான் சோழ தேசத்தின் அரியனை ஏறுவது இயலாத காரியம், உத்தம சோழரின் மகன்
இருக்கும் பொழுது நான் எப்படி அரியனை ஏற முடியும்? சோழ தேசத்தின்
ஊழியனாகவே இருந்து மக்கள் பணி செய்வதிலே தற்பொழுது என் கவனம் இருக்கிறது"

"நாற்பதை நெருங்கிவிட்டீர், இன்னும் காலம் இருக்கிறது, தாங்கள்
விரும்பினால், இன்றே ஆட்சிமாற்றத்திற்கான காரியங்கள் செயல்படுத்த
அரம்பித்துவிடுவேன். தற்பொழுது என் ரகசிய படையில் நாற்பதாயிரம் இளம்
வீரர்கள் தங்கள் கீழ் போர் புரிய சித்தமாக உள்ளனர். தாங்கள் விரும்பினால்
இன்றே அரம்பித்துவிடுவேன்."

"வேண்டாம் அன்பரே, என் தமையன் ஆளாத இந்த தேசத்தை நான் ஆள வேண்டுமா?
வாருங்கள் நாம் இருவரும் ஆலயத்தில் ஈசனை தரிசித்துவிட்டு வருவோம்,"
தலைமை மெய்காப்பாளரின் சைகை மூலம் அழைத்து,"தாங்கள் பயணத்திற்கு தேவையான
ஏற்பாடை தயார் செய்துவிட்டு சத்திரற்கு வந்துவிடுங்கள். நாங்கள்
ஆலயத்திற்கு சென்று வந்துவிடுகிறோம்." என்று கூறிவிட்டு அருள்மொழி,
வந்தியதேவருடன் சிதம்பர நடராஜன் ஆலயத்தை நோக்கி தங்கள் புரவியை வேங்கை புலியை போன்று வேகமாக செலுத்த அரம்பித்தனர்.


சில நிமிடங்களிலே சிதம்பர மேற்கு வாயிலை நிழைந்த இருவரும் நடராஜன்
ஆலயத்தை நோக்கி தங்கள் புரவியை செலுத்தினர்.

"இளவரேசு ஆலயத்தில் வாசலில் என் மக்கள் கூட்டமாக நிற்கிறார்கள், நடராஜன்
ஆலயத்தின் வாயலில் என் இவ்வளவு கூட்டம், சேர அந்தனர்களுக்கு நடராஜன்
ஆலயத்தில் என்ன வேலை."

"தெரியவில்லை அன்பரே."
இவர்கள் இருவரது வருகையை கண்ட கும்பலாக வேடிக்கை பார்த்து கொண்டு
இருந்தவர் வழிவிட்டனர். அங்கு பஞ்சவன்மகாதேவியை நம்பிராஜன் நம்பி இருந்த
கோலத்தை பார்த்த வந்திய தேவரின் மனம் கோதித்தது, புரவியை விட்டு கீழே
குதித்த வந்திய தேவர் தன் உறை வாளை எடுத்தார் அதை கண்டு. பயந்து போய்
இருந்த சேர அந்ததனர்கள் அருகில் வந்து தன் போர் வாளை காட்டி, "யார்
செய்தது இந்த அவசெயலை, சைவம் தளைத்து வாழும் இந்த சோழ தேசத்தில், சைவ
மதத்தை பரப்பும் இப்பெரியவரை காயப்படுத்தியவன் எவன்டா, வீரனாய் இருந்தால்
என்னிடம் மோதி பார்," என்று கர்ஜிக்க

அருள்மொழியோ தன் புரவியை வீட்டு மெதுவாக இறங்கி தனது  உடம்பில் போற்றி
இருந்த செந்நிற போர்வையை சிறிது கிளத்து அந்த துணியை கொண்டு நம்பிராஜன்
நம்பியின் நெற்றியில் இருந்து வெளியான குருதியை துடைத்து, அதை கொண்டு
கட்டு போட்டு விட்டு சந்தமான குரலில், "பெரியவரே தங்களுக்கு என்னுடைய
பணிவான வணக்கம், தங்கள் நெற்றியில் ஏற்ப்பட்ட காயத்திற்கு யார் காரணம்?
இந்த பெண்னின் நிகழ்ந்தது என்ன?" என்று கூறி பஞ்சவன்மகாதேவியை முதன்
முதலாக அவளது முகத்தை பார்த்த போது, அருள்மொழிக்கு, அவனை அறியாமல்
பஞ்சவன்தேவியின் அழகு அவனது மனதை எதோ செய்தது,அவளிடம் பல ஆயிரம் வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தது போல உணர்வு அவனுக்கு ஏற்பட்டது, தன் இதயத்தை முதன் முதலாக பஞ்சவன் தேவியிடம் கைபற்றியதை உணர்ந்தான், தன் தமைக்காக அவளது தோழி வான்மகாதேவியை(வானதி) மணந்தையும், அவள் மூலம் முன்று குழந்தைகளுக்கள் உள்ளதையும் மறக்கடிக்க செய்தது விட்டது, இதே நிலை பஞ்சவன் தேவிக்கும் ஏற்பட்டது.

"எங்கள் சுந்தர சோழரின்  தவபுதல்வனே, பொன்னியன் செல்வனே, எங்களது அபிமான
"என்னிடம் எதற்கு மண்ணிப்பு கேட்கிறீர்கள், மண்ணிப்பு கேட்க வேண்டியது

இளவரசே, நம் ஈசனை துதிபாடிய திருஞான சம்பந்தரின் திருக்கடைக்காப்பு,
திருநாவுக்கரசரின் தேவாரம், சுந்தரின் திருப்பாட்டு, மாணிக்கவாசகரின்
திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவையார் ஆகிய புன்னிய நூல்கள் இன்று
நடராஜன் ஆலயத்தில் உள்ள பொக்கிஷ அறையில் உள்ளது, அதை மீட்டு அதை
தொகுத்து, நம் சோழ தேசத்தில் உள்ள எல்லா சிவாலயங்களை அப்பாடல்களை பாட
வேண்டும் என்கிற ஆசையால், அதை மீட்க வந்தேன், அதை இங்கு உள்ள சேர
அந்தனர்கள் அதை தடுத்தார்கள் என்னை காயப்படுத்தி விட்டார்கள், என்னுடன்
போராடிய என் ஈசனின் மகளையும் அவமான படுத்திவிட்டார்கள் தகாத
வார்த்தைகளால். இந்த நம்பிராஜன் நம்பியின் ஆசையை தாங்கள் தான் நிறைவேற்ற
வேண்டும்" என்று நம்பிராஜன் நம்பி கூற இதை கேட்ட வந்திய தேவனின் கண்கள்
சிவந்தது.

அருள்மொழி நேராக வந்து,"ஆனையிடுங்கள் இளவரசே அவன் தலையை நடராஜனின் காலில்
சாய்க்கிறேன்"

"அமைதியாக இருங்கள் அன்பரே, நான் பார்த்து கொள்கிறேன்" என்று கூறி
நம்பிராஜனை கட்டி அனைத்து விட்டு, அவரை நோக்கி,"மகத்தான காரியத்தை
செய்துவிட்டீர்கள் நம்பிராஜனே, தாங்கள் காரியம் வெற்றி பெரும், அதற்கு
உறுதுணையாக நான் இருப்பேன்" என்று கூற நம்பிராஜன் நம்பிக்கு மகிழ்ச்சி
கடலுக்கே சென்றுவிட்டார்.

நம்மை எப்படி அருள்மொழி தண்டிப்பார் என்று கலக்கி போய் இருந்த சேர
அந்தனர், அருள்மொழி அமைதியாக இருப்பதை கண்டு பேசமுடியாமல் தலை குனிந்து
நின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த சிதம்பர ஆலயங்களை நிர்வாகிக்கும் சகாதேவன்
அய்யங்கார் ஆங்கு வேகமாக வந்து நடந்த சம்பவங்களுக்கு மண்ணிப்பு கேட்க.

இந்த பெரியவரிடமும், அந்த பெண்ணிடமும் தான். உங்கள் உறவுகள் செய்ததற்கு
நீங்கள் வெட்கபடவேண்டும்."

"ஆலயத்தின் பொக்கிஷ அறையில் இருக்கும், தெய்விக நூல்களை நம்பிராஜன்
நம்பியுடன் ஒப்படையுங்கள், சோழ தேசத்து இளவரசனின் உத்திரவு, வேண்டுமனால்
சோழ தேசத்து அரசரான உத்தம சோழரின் உத்தரவையும் வாங்கி தருகிறேன், அவரிடம்
இன்றே கொடுத்துவிடுங்கள்." என்று கம்பிர குரலில் கர்ஜிக்க.

அதை கேட்ட சகாதேவனுக்கு கதிகலங்க, சேர அந்தனர்கள் மத்தியில் சிலசிலப்பு
ஏற்பபட்டது,
இளவரசர் என்பதால் அவர் உத்தரவை மீற முடியாதே என்பதால்
சகாதேவன் பணிவாக தன் வார்த்தை பேச அரம்பித்தார்.
"மண்ணிக்கவும் இளவரசே, தாங்கள் சொன்ன காரியத்தை எங்களால் செய்ய முடியாது,
நீங்கள் கேட்கும் புனித நூல்களை திருநாவுகரசர், அப்பர், சுந்தர்
மாணிக்கவாசகர், ஒரு சேர்ந்து வந்தால் மட்டுமே, அவர்களிடம் மட்டுமே இந்த
புனித நூல்களை கொடுக்கமுடியும், தாங்கள் அந்த நால்வரை அழைத்து வாருங்கள்
பொக்கிஷ அறையின் சாவியை நாங்கள் தருகிறோம்" என்று கூறி ஏளனமாக
அருள்மொழியை பார்க்க.

வந்தியதேவருக்கோ அப்பதிலை கேட்டு சினம் உண்டாகி,"அந்த நால்வரும் எப்படி
வருவார்கள், சிவலோகம் சென்றவர்கள் வருவது எப்படி? இப்படி குதர்கமாக
பேசினால், உங்கள் நாவை இல்லாமல் செய்துவிடுவேன்."

"அன்பரே அமைதி காணுங்கள், இன்றே அந்த நான்கு அடிகளார்களை நாம் அழைத்து
வருவோம், புனித நூலை மீட்போம்" என்று கூறவிட்டு.

சேர அந்தனர்கள் மத்தியில் தன் கம்பிர குரலின்"சூரியன் வான் மத்தியில்
வருவதற்கு முன்பே, நீங்கள் கேட்ட அந்த நால்வரையும் அழைத்து வருகிறேன்,
பெக்கிஷ அறையின் சாவியை எடுத்து வையுங்கள். அன்பரே வாருங்கள் நாம்
அழைத்து வருவோம்." என்று கூறி வந்திய தேவரின் தோள் மேல் கை போட்டு
புரவியை நோக்கி நடை போட்டார்கள்.

காத்து இருங்கள் அடுத்த திங்கள் வரை.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 1

இருபுறமும் சூழ்ந்து இருக்கும் தில்லை மரங்களுக்கு இடையே உள்ள ஒற்றையடி
பாதையில் செந்நிற பட்டாடை அணிந்து அழாகன ஒரு இளம்பெண், ஆண் மயில் தோகை
விரிந்து வரும் அழகை போல கம்பிரமாக நடந்துவந்தாள், அவள் காலில் உள்ள
சலங்கை ஒலி அழகான இனிமையான இசை வாசிக்க. அவளது முகமே சந்திரன் போல
பிரகாசிக்க, வானில் இருந்து தேவலோக ரம்பையே பூமிக்கு வந்தாகவே
தோன்றுகிறது, இவள் அழகை கண்டு பித்தனாகாதவர்கள் இந்த தில்லை நகரிலே
இல்லை,

தில்லையில் நடராஜன் நடணமாதும் அவரின் சன்னிதானத்தில், இவள் ஆடும் அந்த
பரதத்தில் அந்த கைலாயமே அதிரும், பஞ்ச பூதங்களையும் பரதத்தில் இவள்
பிடிக்கும் ஆபிநயத்தில் அடக்கும்.
regaan

அதனால் தான் என்னவோ இவள் பிறக்கும் போதே இவளுக்கு பஞ்சவன்மகாதேவி என்று
பெயர் சூட்டினார்களோ என்று என்ன தோன்றுகிறது.

(அரசு குலத்தில் பிறந்து இருக்கவேண்டியவள், அவள் தலை விதியால் சாதாரண
குதிரை காவாளியின் மகளாக பிறந்தால் இன்று தேவராட்டியாக ஆக்கப்படாடாள் சேர
அந்தனார்களின் சூழ்ச்சியால்.

திருநள்ளாறு நம்பிராஜன் மட்டும் இவளை சேர அந்தனர்களிடம் இருந்து காப்பாற்றி
அந்த தில்லை நடராஜனுக்கு சேவகம் செய்ய பணியாமல் விட்டால், என்னவாகி
இருக்கும் இவள் வாழ்வு. தில்லை நடராஜன் முன் அதிகாலையில் தினமும் தன்
நடணத்தை அரங்கேற்றுவது தான் இவள் பணி, என்றும் போல இன்றைய விடியலும்
சாதராண விடியலாக இல்லாமல் காலத்தை மாற்றிய மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை
இவளால் ஏற்படுத்தும் என்று கனவிலும் இவள் நினைத்து இருக்கமாட்டாள். 

சோழ தேசத்தின் குலவிளக்கான இளவரசி குந்தவைப்பிராட்டிக்கு இனையாக இவளும் மாற
போகிறாள் என்று கனவு கூட இவள் கண்டு இருக்கமாட்டாள். இவள் வாழ்வில்
அப்படி என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை தொடர்வோம். கடல் கடந்த பல தேசங்களை
வென்ற ஒரே ஒரு இந்திய மன்னன் ராஜேந்திர சோழன் இந்த தேவராட்டிக்காக கோயிலே
கட்டினான் என்பது வரலாறு.)
Tenkarai Brahmadeyam Sri Cholamadevi Chadurvedi Mangalam

"திருவாசகம் கேட்டாலே உருகாத நெஞ்சமும் உருகும், அதை நம்பிராஜன் பாடினால்
ஆஹா என்ன அற்புதம், அந்நாவுக்கு அரசரே அவர் நாவில் கூடிஇருக்கிறார்,
இன்று அவரிடம் தேவாரம் பாடல்களை கேட்டு என் உள்ளம் மகிழவேண்டும், கவலைகள்
மறக்கவேண்டும்," என்று எண்ணியவாரே மனமகிழ்ச்சியூடன் மார்கழி குளிரில்
நடுங்கி கொண்டு சிதம்பரம் ஆலயம் நோக்கி வேகமாக நடக்கலானார் பஞ்சவன்மகாதேவி.

"ஏய் பஞ்சவன்தேவி உனக்காக எவ்வளவு நேரம் அரசுமரத்தில் காத்து இருப்பது,
என் இவ்வளவு காலதாமதம், நம்பிராஜன்அடிகளார், இன்று நடராஜன் முன் தேவாரம்
பாட வந்து இருப்பதை அறிந்துமா இவ்வளவு தாமதம்"

"பேசுவதற்கு நேரம் இல்லை கயல், வேகமாக வா."

"உனக்காக காத்து இருந்தது நான், தாமதமாக வந்தவள் நீ. என்னை குறை
சொல்கிறாயா?" கயல்விழி இரு கைகளை கட்டிகொண்டு கோபமாக கேட்க, அவளது கைகளை
பற்றி கொண்டு பஞ்சவன்மகாதேவி வேகமாக நடராஜன் கோயிலை நோக்கி ஒடி
அரம்பித்தாள்..

சரியாக பூஜை அரம்பிக்கும்பொழுது சன்னிதானத்துக்குள் சென்றுவிட்டனர்,

அலகாரிக்கப்பட்ட நடராஜன் சன்னிதானம் திறக்கப்பட அதை வணங்கிவிட்டது தன்
தோழியூடன் நாட்டியத்தை அரங்கேற்றிறாள் பஞ்சவன் தேவி,

இறைவனை தொழுதுவிட்டு, காவி உடை அனிந்த வயதான முனிவர் போன்று காட்சி
அளித்த நம்பிராஜன் நம்பியை வணங்கி நின்றாள்.

"மகளே உனக்கு என்றுமே ஈசன் துணை நிற்பாராக, எப்படி இருக்கிறாய் மகளே"

"அய்யனே, தங்கள் ஆசிர்வத்தால், நான் மிகவும் நலமாக இருக்கிறேன், தங்கள்
எனக்கு வாழ்வு அளித்தவர்கள் அல்லவா,"

"அவளுக்கு நீங்கள் வாழ்வு அளித்தீர்கள், ஆனால் அவள் என்னிடம் அதிகாரம்
செய்தே என்னை அடிமையாக்கிவிட்டாள்" என்று வழக்கமான தன் குறும்பு
சிரிப்புடன் தன் அவலங்களை கயல்விழி கூற, அவளை கண்டிக்கும் பார்வையில்
பேசுவதை நிறுத்த சொல்லி பரத்தின் அபிநயம் பிடிக்க இவர்கள் இருவரது செயலை
ரசித்து சிரித்து கொண்டே நம்பிராஜன் தேன்மொழியை நோக்கி, "மகளே, உன்னை
பஞ்சவன்தேவி ஏவல் புரிந்தற்காக வருத்தப்படுகிறாய், ஒரு காலம் வரும் இவள்
நம்மிடம் ஏவல் புரியமட்டாளா என்று நீ ஏங்கும் காலம் வரும்"

அதை கேட்டு வயிறு குலுங்க சிரித்து கொண்டு, " இவளது கட்டளைக்காக விழி
மேல் விழி வைத்து காத்து இருக்க, இவள் ஒன்று சோழ தேசத்து இளவரசி அல்லவே"
என்று ஏளனமாக கூற

"அய்யனே இவள் குறும்புகாரி இவள் துடுக்குதனமாக பேசியதற்கு மண்ணிக்கவும்,
இவள் எப்பவும் இப்படி தான் யாருடன் எப்படி பேசவேண்டும் என்பதை
தெரியாதவள்."

"மகளே அவள் சொல்வதில் தவறே இல்லை"என்று கூறிவிட்டு கயல்விழியை நோக்கி

"மகளே கயல்விழி, பஞ்சவன்தேவியின் திறமைக்கு சோழ தேசத்து அரசியாகவே
ஆகலாம், இவளை மணக்க சோழ தேசத்து அரசன் கொடுத்துவைத்து இருக்கவேண்டும்."


"என்னது நம் மன்னன் மதூராந்தக தேவர் இவளை மணக்க கொடுத்துவைத்து
இருக்கவேண்டுமா, முதிய பருவத்தில் இருக்கும் நம் மன்னர் இவளை மணக்க
விரும்புவாரா?"

பஞ்சவன்தேவி கயல்விழியை சினத்துடன் நோக்கி "ஏய் கயல் உன் திருவாயை
கொஞ்ச நேரம் திறக்காதே,"

"சரி சரி உண்மையை கூறினாள் உனக்கு கோபம் தான் வரும் நான் என் திருவாய்
திறக்கல சரியா"

"அய்யனே தங்களிடம் இருந்து திருவாசகம் கேட்க அவலாக வந்தேன் ஆனால் இவளால்
எல்லாம் மறந்துவிட்டேன், தாங்கள் குரல் அமுதை எங்க செவி பருக அவலாக
உள்ளது, தாங்கள் எங்களுக்காக பாடுவீர்களா?"

"என் கோரிக்கை வைக்கிறாள், நீ தான் சோழ அரசியாகிற்றே கட்டளை இடலாமே"
என்று மீண்டும் தன் குறும்பு பேச்சை கயல்விழி தொடங்க


அதை அமோதிக்கும் வகையில் "மகளே, உன் தோழி கூறியது போன்று, நீ எனக்கு
கட்டளையே இட்டு இருக்கலாம், மகளே உனக்ககாக    பாடுகிறேன்"


ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
                        ஒருவனாய் நின்றாய், நீயே; 
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
                        மருகனாய் நின்றாய், நீயே; 
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
                       என்மேல் வைத்தாய், நீயே; 
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு

                       அகலாத செம்பொன்சோதீ!.
"ஆகா! என் இனிமையான பாடல்கள்!, என் இனிமையான குரல்!, இந்த பாடலை வாழ்நாள்
முழுவதும் கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது, அய்யனே தில்லை நடராஜனுக்காக
திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை எங்கள் செவி கேட்க தவம் இருக்கிறது,
தாங்கள் வரம் தரவேண்டும்",

"மகளே! நான் வாழ்வதும் பாடுவதும் அந்த தில்லை நடராஜனுக்காக, என்
ஈசனுக்காக திருவாசகத்தில் இருந்து பாடுகிறேன், கேள் மகளே! "


தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,

"அய்யனே உங்கள் நாவில் சரஸ்வதியே கூடி இருக்கிறாள், அய்யனே இதை போன்று
அப்பர் சுந்தர் மாணிக்கவாசர் திருவாசகர் பாடிய   அனைத்து பாடல்களும்
பாடுவீர்களா?"

"மகளே எல்லா பாடல்களும் தெரியாது, கொஞ்சம் தான் தெரியும், நான் இன்று
சிதம்பரம் வந்ததே அதற்காக தான், இங்கு கோயில் சிறைபடுத்தப்பட்டு
இருக்கும் நான்கு சிவனடியார்கள் பாடிய ஒலைசவடியை மீட்பது என்கிற முடிவில
இங்கு வந்து இருக்கிறேன், அந்த நூல்களை தொகுத்து சோழ தேச முழுவதும் உள்ள
சிவலயங்களில் இசைக்க செய்வதே எனது கனவு,"

"அய்யனே தங்கள் எடுத்த காரியம் உயர்தரமானது, ஆனால் இதை இங்கு உள்ள சேர
அந்தணர்கள் செய்ய விடுவார்களா?, அவர்களிடம் தானே அதிகாரமே உள்ளது.
அவர்கள் தருவார்களா அறை சாவியை"

"மகளே இது சோழ தேசம், சைவத்தை வளர்க்கும் பூமி, நமக்கு ஈசன துணை உண்டு,
நாம் தான் மீட்க வேண்டும் நம் தெய்விக நூல்களை, சாவி எதற்கு கடப்பாரை
போதாதா? நீயும் என்னுடன் வருகிறாயா?"


"அய்யனே தங்களுக்காக உதிரம் சிந்தவும், உயிர் கொடுக்கவும் காத்து
இருக்கிறேன், நீங்கள் அழைப்பது இறை பணிக்காக நான் வராமல் இருப்பேனா"
என்று பெண் சிங்கம் போல கர்ஜிக்க. இருவரது உரையாடலை கேட்டு மிரண்ட
கயல்விழி அவ்விடம் விட்டு வேறு காரணம் கூறி நழுவிட்டாள்.

நம்பிராஜன் நம்பியூடன் சேர்ந்து சிதம்பர அலயம் பின்புறம் உள்ள
கருவூலதற்கு சென்றார்கள் ஆங்கு கதவுகளில் உள்ள பூட்டுகளை கற்களால் உடைக்க
அரம்பித்தார்,
இச்செய்தி சேர அந்தனர்கள் தெரியவர அவர்கள் சினம் கொண்டு ஆங்கு வர
நம்பிராஜன் நம்பி பூட்டுகளை கஷ்டபட்டு உடைபதை கண்ட ஒரு சேர அந்தனர்
கோவிந்த ராஜன் தன் வலிவை கொண்டு நம்பி ராஜன் நம்பியை கிழே தள்ளிவிட
கூழாங்கற்களை நம்பிராஜன் நம்பியின் நெற்றியை பதம்பார்க்க அதனால் முகம்
முழுவதும் குருதி பரவிட வலியால் துடித்தார், இதை கண்ட பஞ்சவன் தேவி
ஆவேசமாக சபித்தாள், "சிவனடியாரை அடித்த நீங்கள் கைலாயம் போகவே
மாட்டீர்கள்."

இதை கேட்ட சேர அந்தனர்  ஒருவர் "கவலைபடாதே நாட்டியக்காரியே, நாங்கள்
வைகுண்டம் செல்வோமே தவிர, கைலாயம் செல்லவே மாட்டோம்,

வந்தாரை வாழ வைக்கும் வைகுண்டம் இருக்க கைலாயம் எதற்கு?"

பஞ்சவன்தேவியை பலமுறை அடைய துடித்த சிதம்பரத்தை நிர்வாகிக்கும்
சகாதேவனின் இளவயது மகன் தன் கலவி பேச்சை அரம்பிக்க " பஞ்வன் தேவியே,
என்று என் பஞ்சனை தேவியாக மாறுவீர், ஈசனுடன் நாட்டியம் ஆடி என்ன இன்பம்
கண்டீர், என் முன் உன் நாட்டியத்தை அரங்கேற்று நான் தரும் இன்பத்தை கண்டு
அகமகிழ்வாய்"


"சிவ சிவாய்? ஈசன் இது என்ன சோதனை உன் சன்னிதான்திலே" என்று பஞ்சவன் தேவி அழ இதை கண்ட நம்பிராஜன் நம்பி, "நீங்கள் செய்கின்ற காரியத்தை நீங்கள் வணங்கும் பெருமாளே பொறுத்து இருக்கமாட்டார், பெண்ணிடம் பேச கூடிய வார்த்தைகளா இது?"


"கிருஷ்ண அவதாரத்தில் எங்கள் பெருமாள் விளையாட விளையாட்டாயா நான்
விளையாடிவிட்டேன்."

"அவர் தெய்வம் நீ தெய்வமா? நீ செய்கின்ற காரியத்திற்கு எங்கள் சோழ மன்னர்
அறிந்தால், அவர் தண்டனையில் இருந்து நீர் தப்பவே முடியாது" இதை கேட்ட சேர
அந்தனர் ஒருவர் "புலியை கொன்ற இனமடா நாங்கள் இந்த கிழத்து புலி என்ன
செய்துவிடும்" என்று கூறிவிட்டு பஞ்சவன் தேவியையும் நம்பிராஜன் நம்பியை
தர தர என்று இழுத்து ஆலயத்தை விட்டே வெளியேற்றினர், அவர்கள் இழுத்தால்
பஞ்சவன் தேவியின் ஆடைகள் கிழிந்து அதை மறைக்க தன் காவி நிற போர்வையை
போற்றிவிட்ட நம்பிராஜன் நம்பி உரக்க குரலில்,"நீங்கள் இந்த பெண்ணிடம்
செய்த இழுக்கான செயலிற்கு அந்த ஈசனே உங்களை தண்டிக்க வருவார்."

"எங்கே வர சொல்லும், அந்த ஈசனை ஒரு கைபார்ப்போம்."    

அதே நேரத்தில் சிதம்பர சிவலாயம் நோக்கி புழுதி புயலை கிளப்பி வேகமாக இரு
புரவி வர அதை கண்ட நம்பிராஜன் நம்பி இதோ ஈசன் அனுப்பிய சேகவர்

சேகவர் வந்துவிட்டார், அவரிடம் காட்டுங்கள் உங்கள் வீரத்தை

வந்த இருவரை கண்ட உடன் ஆங்கு இருந்த சேர அந்தனர்கள் கதிகலங்கி தான்
போய்விட்டார்கள்.

அந்த இருவர்கள் யார் என்று அடுத்த திங்கள் வரை காத்து இருங்கள்.